Friday, 15 December 2017

சகலரையும் சிந்­திக்க வைத்­து­, வைரலாகியுள்ள இலங்கைப் பெண்ணின் கேள்வி!

சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சி­லான ஐ.சி.சி.-யிடம் டுவிட்­டரில் இலங்கைப் பெண் எழுப்­பிய கேள்வி அனை­வ­ரையும் சிந்­திக்க வைத்­துள்­ளது.

இந்­திய கிரிக்கெட் அணித்­த­லைவர் விராட் கோஹ்­லியும் பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்­மாவும் சமீ­பத்தில் காதல் திரு­மணம் செய்து கொண்­டனர்.

இது­கு­றித்து பிர­ப­லங்கள், கிரிக்கெட் நட்­சத்­தி­ரங்கள் பலரும் வாழ்த்து தெரி­வித்து வந்த நிலையில் சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சி­லான ஐ.சி.சி.-யும் தனது டுவிட்டர் பக்­கத்தில் வாழ்த்து தெரி­வித்­தி­ருந்­தது.

இதனை கவ­னித்த இலங்கை பெண் ஒருவர் ஐ.சி.சி.யிடம் -நியா­ய­மான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அதில், கோஹ்­லி–-­அ­னுஷ்கா திரு­மணம் நடை­பெற்­றது மகிழ்ச்சி தான். ஆனால் சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்சில் எப்­போது திரு­ம­ணத்­திற்கு வாழ்த்து சொல்ல தொடங்­கி­யது? இது­வரை வேறு யாருக்­கா­வது வாழ்த்து கூறி­ய­துண்டா என்­பது போன்ற கேள்­வியை எழுப்­பி­யுள்ளார். அனை­வ­ரையும் சிந்­திக்க வைத்­துள்ள அவரின் இந்த கேள்வி சமூக வலைத் தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

Author: verified_user

0 comments: