Sunday, 31 December 2017

தமிழக அரசியலில் பரபரப்பு! நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதித்தார்!

ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசி வரும் நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டி இட உள்ளதாகவும் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் நாற்காலியில் அமர்ந்திருப்பேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா? நான் இப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது ஜனநாயக ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அரசியல் கெட்டு போய்விட்டது.
அனைத்து சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். ஆண்டவனின் அருளும் மக்களின் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இது இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சாதி மத பேதமற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுக்க வேண்டும். ’உண்மை, உழைப்பு, உயர்வு இது தான் என் மந்திரம். வருகிற சட்டமன்ற போரில் நம் படையும் இருக்கும்’ என மேலும் தெரிவித்து தன் அரசியல் எண்ட்ரியை உறுதி செய்துள்ளார்.
ரொம்ப பில்ட் அப் கொடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எனக்கு மீடியா பார்த்தால் தான் பயம். அரசியல் பார்த்தால் பயம் இல்லை. மற்றபடி நான் அரசியலுக்கு வருவது உறுதி. இதுகாலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா? எனவும் தெரிவித்துள்ளார்.



இவரின் அரசியல் நுழைவை அடுத்து ஆதரவாளர்கள் தமிழகம் முழுதும் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்து வருகின்றனர்.

Author: verified_user

0 comments: