Thursday, 14 December 2017

இஸ்ரேலின் முடிவுக்கான தொடக்கம் - ஹிஸ்புல்லாஹ்!

ஃபலஸ்தீனின் ஜெரூசலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சர்வதேச சட்டத்துக்கு எதிரான ஒருதலைபட்ச முடிவுக்கு எதிராக உலகெங்கும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

லெபனனின் தலைநகர் பெய்ரூட்டில் அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூதரகத்தின்மீது மக்களின் கோபம் திரும்புவதற்கான சாத்தியமிருந்ததால் காவல்துறை கண்ணீர்புகை குண்டுகளை உபயோகித்து கூட்டத்தைக் கலைக்க முயன்றது. இதனால் போராட்டம் வன்முறையாக வெடித்தது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஹிஸ்புல்லாஹ் அமைப்பினர், அமெரிக்காவுக்கு முடிவு; இஸ்ரேலுக்கு முடிவு என கோஷங்கள் எழுப்பினர். ஹிஸ்புல்லாஹ்வினரிடையே அதன் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் பேசும்போது,

சிரியாவில் ஐ எஸ் ஐ எஸ்ஸுக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஹிஸ்புல்லாஹ்விற்கு ஃபலஸ்தீன் பிரச்சனை அடிப்படையானது. அது நமது வாழ்வாதாரப் பிரச்சனையும்கூட. எனவே இனிமேல் ஹிஸ்புல்லாஹ்வின் கவனம் முழுமையாக இஸ்ரேலுக்கு எதிராக இருக்கும்.

அமெரிக்காவின் முடிவு முட்டாள்தனமானது. அதன் இந்த முட்டாள்தனமான முடிவே இஸ்ரேலின் முடிவுக்கான தொடக்கமாக அமையும்.

ஃபலஸ்தீனுக்காக இஸ்ரேலுக்கு எதிராக இறுதிவரை போராடுவோம் என அழைப்பு விடுத்தார். லெபனானில் ஃபலஸ்தீனியர் 450,000 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இது லெபனானின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.(அபூஸுமையா)

Author: verified_user

0 comments: