Thursday, 14 December 2017

சவூதி அரேபியாவுக்கு எதிராக ஃபலஸ்தீன் போராட்டம்! (படங்கள் இணைப்பு)

ஃபலஸ்தீனிடமிருந்து ஆக்ரமித்து கைப்பற்றப்பட்ட ஜெரூசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவுக்கு எதிராக ஃபலஸ்தீனில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதில் சவூதி அரசர் சல்மான் மற்றும் இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பப்பட்டன.

1948 மற்றும் 1967 ல் நடந்த யுத்தங்களின் போது ஃபலஸ்தீனிடமிருந்து இஸ்ரேல் ஆக்ரமித்து கைப்பற்றிக்கொண்ட முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் யூதர்களின் புனித நகரான ஜெரூசலம் சர்வதேசச் சட்டப்படி ஐக்கிய நாடுகள் கண்காணிப்பில் ஜோர்தானில் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்நகரத்தை இஸ்ரேல் தமது தலைநகராக ஆக்குவதற்கு நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தது. இதனை அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் இதுவரை எதிர்த்து வந்தன.

நான்காவது ஜெனிவா ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டிடமிருந்து ஆக்ரமித்து கைப்பற்றிய இடத்தில் எந்த ஒரு மாற்றம் செய்வதும் சர்வதேசச் சட்டப்படி குற்றமாகும். தற்போது இச்சட்டத்தை மதிக்காமல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உடந்தையாக ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும்விதத்தில் அதன் இஸ்ரேலுக்கான தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளது.

இதற்கு உலகம் முழுவதிலுமிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்த அறிவிப்புக்கு எதிராக ஃபலஸ்தீனில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இவர்களுடன் மறைமுகக் கூட்டணி வைத்து ஃபலஸ்தீனை இஸ்ரேலுக்குத் தாரைவார்க்க சவூதி உடந்தையாக உள்ளதாகக் கூறி சவூதி அரசினை ஆளும் சவூத் குடும்பத்தினருக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இப்போராட்டத்தை ஒடுக்க இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை எடுத்துவருகிறது. எதிர்ப்புப் பேரணியின்மீது இஸ்ரேல் இராணுவம் தாக்கியதில் இதுவரை இரு ஃபலஸ்தீனியர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர்.

எதிர்ப்பு போராட்டத்தின்போது, அமெரிக்க இஸ்ரேலிய கொடிகள் எரிக்கப்பட்டன. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உருவப்படம் எரிக்கப்பட்டது. சவூதி அரசர் சல்மான் மற்றும் அவரின் மகனும் இளவரசனுமான முஹம்மது பின் சல்மானின் புகைப்படங்கள் கிழித்து எறியப்பட்டன. சவூத் குடும்பம் சவூதி ஆட்சியினைவிட்டு விலக வேண்டுமென பதாகைகள் எழுப்பப்பட்டன.

இஸ்ரேல் என்றொரு நாடே இல்லாத போது அதற்குத் தலைநகர் எங்கிருந்து வருமென வடகொரிய அதிபர் ட்ரம்பிற்கு எதிராக கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.(அப்துர் ரஹ்மான)




Author: verified_user

0 comments: