Tuesday, 26 December 2017

ஜெருசலேம் நகரில் மற்ற நாட்டு தூதரகங்களை கொண்டுவர இஸ்ரேல் அரசு தீவிரம்

ஜெருசலேமிற்கு மற்ற நாடுகளின் தூதரகங்களை மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தங்கள் நாட்டு தூதரகமும் அங்கு மாற்றப்படும் என தெரிவித்தார். டிரம்பின் அறிவிப்பிற்கு எதிராக ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மூன்றில் இரு பங்கு நாடுகள் ஆதரவளித்துள்ளன.

இந்நிலையில், ஜெருசலேம் அங்கீகாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் மற்ற நாட்டு தூதரகங்களை அங்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், பிலிப்பைன்ஸ், ரோமானியா, தெற்கு சூடான் உள்ளிட்ட 10 நாடுகளுடன் விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் என்றும் கருதப்படுகிறது.

Author: verified_user

0 comments: