Thursday, 7 December 2017

அமீரகத்தில் வாகனப் பதிவு, புதுப்பித்தல் உட்பட பல சேவை கட்டணங்கள் உயர்வு!

அமீரகம் முழுவதும் வாகன பதிவு, புதுப்பித்தல் உட்பட பல சேவை கட்டணங்கள் உயர்ந்தது

அமீரக துணை ஜனாதிபதியும், பிரதமரும், துபை ஆட்சியாளருமான ஷேக் முஹமது அவர்களின் தலைமையின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மான எண்: 30/2017 படி, புதிய வாகனப் பதிவு, புதுப்பித்தல், வாகன பரிசோதனை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல சேவைகளுக்கும் அமீரகம் முழுவதும் ஓரே கட்டண அளவு நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமானதை தொடர்ந்து டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டப்படி, இலகுரக வாகன உரிமையாளர்கள் (Owners of Light vehicles) புதிய வாகனங்களை முதன்முறை பதிவு செய்ய 400 திர்ஹம், புதுப்பிக்க 350 திர்ஹம் (துபையில் பழைய கட்டணம் 250), வேறொரு உரிமையாளருக்கு மாற்ற 350 திர்ஹம், புதிய உரிமையாளர் பெயரில் மீண்டும் பதிவு செய்ய 400 திர்ஹம்.

வாகன பரிசோதனை கட்டணம் 150 திர்ஹம் (முன்பு துபையில் 120), புதிதாக வாகன ஓட்டுனருக்கான கோப்பு திறக்க 200 திர்ஹம் (The fees for opening a traffic file for driving licence), புதிய ஒரு வருட ஓட்டுனர் அனுமதி (Driving License), புதுப்பித்தல், காணாமல் அல்லது சேதமடைந்ததற்கு பதிலாக புதிய ஓட்டுனர் அனுமதி, ஒரு வருடத்திற்கு மேல் அனுமதியுள்ள ஓட்டுனர் அனுமதி பெற 300 திர்ஹம்.

மாற்றத்தக்க பிற நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமத்தை அமீரகத்தில் பதிவு செய்து புதிய வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்ள 600 திர்ஹம். இது தவிர ஏற்கனவே நடைமுறையில் உள்ள சேவை மற்றும் இதர வகை கட்டணங்களும் மேற்படி புதிய கட்டணங்களுடன் சேர்த்தே வசூலிக்கப்படும்.

முழுமையான பட்டியலை பார்வையிட:

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: