Friday, 15 December 2017

எரிபொருடள் நிரப்ப திடீரென கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்ட மிகப் பெரிய விமானம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மிகப் பெரிய விமானமொன்று இன்று திடீரென தரையிறக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய விமான ரகங்களில் ஒன்றாகக் கருதப்படும் விமானமே இவ்வாறு இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஏ-380 ரக விமானம் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக இவ்வாறு இலங்கையில் இன்று அதிகாலை தரையிறக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஈ.கே. 413 ரக விமானம் இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

எரிபொருளை நிரப்பிக்கொண்ட விமானம் காலை 6.45 மணிக்கு மீளவும் டுபாய் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது. இந்த விமானத்தில் 405 பயணிகளும், 25 விமானப் பணியாளர்களும் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Author: verified_user

0 comments: