Friday, 15 December 2017

காதலனுடன் இருந்ததை தந்தையிடம் சொல்வேன் என்ற மகள் கழுத்தை அறுத்து கொலை தாய்

கிழக்கு டெல்லியில் காசிப்பூர் பால் பண்ணை அருகே 29 வயது பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் வண்டி இழுக்கும் வேலை பார்த்து வந்தார்.

அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த் சுதிர்( வயது 23) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சம்பவத்தன்று கணவர் வெளியே மது குடிக்க சென்று விட்டார். அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு சுதிர் வந்து உள்ளார். 4 வயது மகனும் 2 வயது மகளும் டிவி பார்த்து கொண்டு இருந்தனர் 6 வயது மகள் மட்டும் வெளியே சென்று இருந்தார்.

இதை பயன்படுத்திய சுதிர் அந்த பென்ணுடன் தனிமையில் இருந்து உள்ளார். அப்போது 6 வயது மகள் அங்கு வந்து உள்ளார். இதை பார்த்த மகள் தனது தந்தையிடம் கூறுவதாக மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் மகளின் கையை பிடித்து கொள்ள சுதர் அந்த சிறுமியின் கழுத்தை அறுத்து உள்ளார்.

பின்னர் சுதிர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தாயார் குழந்தையை காணவில்லை என கணவனிடமும் உறவினர்களிடமும் கூறி உள்ளார். அவர்களுடன் சேர்ந்து தேடி உள்ளார். அந்த பெண் தனது 4 வயது மகனிடனும் 2 வயது மகளிடமும் அக்காவை 'பேய்கள் எடுத்து சென்று விட்டது என கூறி உள்ளார்.

சிறுமியை கானவில்லை என போலீசில் புகார் கூறப்பட்டது. போலீசார் வந்து தேடி பார்த்த போது குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் தயாரிடம் விசாரணை நடத்திய போது அவர் உண்மையை ஒத்து கொண்டார். 

இது குறித்து காசிபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து உள்ளனர்.

Author: verified_user

0 comments: