Thursday, 14 December 2017

ஜெரூசலம் ஃபலஸ்தீனுக்குச் சொந்தம் - மொராக்கோ! ட்ரெம்புக்கெதிராக ஆர்ப்பாட்டம்

ஃபலஸ்தீனுக்கு எதிரான அமெரிக்க அதிபரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மொரோக்கோ தலைநகர் ரபாத்தில் போராட்டம் நடந்தது. இதில் மொரொக்கோ அரசு அதிகாரிகள், எதிர்கட்சியினர், பொது மக்கள் எனப் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் ட்ரம்புக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக கண்டனங்கள் எழுப்பப்பட்டன. ஜெரூசலம் ஃபலஸ்தீனுக்குச் சொந்தமானது. அதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என மக்கள் குரலெழுப்பினர்.

மொரொக்காவின் நிதியமைச்சர் முஹம்மத் பூசைத் செய்தியாளர்களிடம் பேசும்போது, இப்போராட்டம் எங்களின் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவிப்பதற்கானது. அமெரிக்காவின் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம் எனக் கூறினார்.

Author: verified_user

0 comments: