Friday, 15 December 2017

இளம் பெண் ஒருவர் செல்பி எடுக்கும் போது, ரயிலில் சிக்கி தலை பிளந்த சோகச் சம்பவம்!

இந்தோனிசியாவில் ரயில் தண்டவாளத்தில் நான்கு பெண்கள் செல்பி எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்த பெண்கள் ரயில் வரும் சமயத்தில், ரயிலுக்கு சில மீட்டர் தூரம் இருக்கும் படி செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த நான்கு பேரில் ஒரு பெண் தன்னுடைய செல்பி ஸ்டிக்கை வைத்து, செல்பி எடுக்க, முயற்சித்துள்ளார். இதில் இவர்களுக்கு பின்னால் இருந்த எலி ஹயாதி (16) என்ற பெண் சற்று நிமிர்ந்து புகைப்படத்திற்குள் வர முயற்சித்த போது, இரயிலின் அடிப்பகுதி அவரை தட்டியுள்ளது. இதனால் அவர் இரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார். ஆனால் அருகில் இருந்த தோழிகள் முதலில் இதைக கண்டு சிரித்துவிட்டு, அதன் பின் அதிர்ச்சியடைந்துள்ளனர். எலி ஹயாதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு, மூளை தெரியும் அளவில் காயம் உள்ளது. அந்த பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்பி மோகத்தால், இளம் பெண் ஒருவர் ரெரயிலில் சிக்கியதால், அவ்வழியே பொதுமக்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Author: verified_user

0 comments: