Sunday, 31 December 2017

மத்திய வங்கியின் விசேட அறிக்கை! சேதப்படுத்தப்பட்ட நாணயத் தாள்களை மாற்ற மார்ச் வரை அவகாசம்!

சேதப்படுத்தப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுனரால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சேதமாக்கப்பட்ட நாணயத் தாள்கள் செல்லுபடியாகும் திகதி இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில் இந்த கால நீடிப்புக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சேதமடைந்த நாணயத் தாள்களை அங்கிகாரம் பெற்ற வங்கிகளில் மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: