Thursday, 14 December 2017

கத்தார் - ஃபிரான்ஸிடமிருந்து 8 பில்லியன் டாலரில் டைஃபூன் போர் விமானங்கள்!

ஃபிரான்ஸிடமிருந்து 1 பில்லியன் டாலருக்கு 12 ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்கும் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது பிரிட்டனிடமிருந்து 8 பில்லியன் டாலருக்கு 24 டைஃபூன் ரக போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் கத்தர் கையெழுத்திட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிட்டனின் கவின் வில்லியம்சனும் கத்தரின் பாதுகாப்பு துறை அமைச்சர் காலித் பின் முஹம்மத் அல் அத்தியாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தப்படி பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸ் கத்தர் ஏர் ஃபோர்ஸிற்கு போர்ப் பயிற்சியும் அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழவிருக்கும் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஏரியல் வியூவில் கத்தருக்கான பாதுகாப்பு வழங்க இந்தப் போர் விமானங்கள் பயன்படும் எனவும் வளைகுடா பிரதேசத்தின் பாதுகாப்புக்காக இவை வாங்கப்படுகின்றன எனவும் கத்தர் அரசு தரப்பு செய்தி தெரிவிக்கிறது.

தீவிரவாத அமைப்புகளுக்குக் கத்தர் உதவுகிறது என்றப் பொய்க் குற்றச்சாட்டினைச் சுமத்தி கத்தர் மீது சவூதி முதலான அரபு நாடுகள் தடை விதித்தன் பின்னர், கத்தர் பெருமளவில் போர்த் தளவாடங்களை வாங்கிக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. (Abu Sumaiya)

Author: verified_user

0 comments: