Saturday, 2 December 2017

88 மாணவிகளின் ஆடை அகற்றி உள்ளாடையுடன் நிற்கவைத்த கொடூரம்.! இந்தியாவில் சம்பவம்!

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பபும் பாரே மாவட்டத்தில், காந்தி பாலிகா வித்யாலயா என்ற பள்ளி தங்கும் வசதியுடன் இருக்கிறது. இந்த பள்ளி காலி என்ற நகரத்தில் உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு உள்ள இடத்தில் சில மாணவியர் மற்றும் ஆசிரியர்களை பற்றி தவறாக எழுதப்பட்ட காகிதம் தலைமை ஆசிரியருக்கு கிடைத்துள்ளது. அதை பார்த்த தலைமை ஆசிரியர் கடும் கோபத்திற்கு ஆளானார்.

மேலும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு இடையில் இந்த காகிதம் இருந்ததால் அந்த வகுப்பில் படிக்கும் மாணவிகள் தான் இவ்வாறு செய்திருப்பார்கள் என்று அந்த இரண்டு வகுப்பில் படிக்கும் மாணவியினர் 88 பேரை ஆடை அகற்றி உள்ளாடையுடன் நிற்கவைத்துள்ளார் அந்த தலைமை ஆசிரியர். இதுகுறித்து அங்குள்ள மாணவியர் அமைப்பிற்கு இந்த செய்தி தெரிய வர அந்த தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மேல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.(IBC TAMIl)

Author: verified_user

0 comments: