Thursday, 14 December 2017

சவுதியில் பெட்ரோலியப் பொருட்கள் 80% வரை விலையேற்ற திட்டம்!

சவுதியின் உள்நாட்டு சந்தையில் 80% வரை பெட்ரோலிய பொருட்கள் விரைவில் விலையேற்ற திட்டமிடப்பட்டுள்ளன. அதேபோல் ஜெட் பியூயல் (Jet Fuel) எனப்படும் விமானத்திற்கான பெட்ரோல் உள்நாட்டு விமானங்களுக்கு மட்டும் உயர்த்தப்படும் என்றாலும் இவை சிறுகச் சிறுக 2023 ஆம் ஆண்டிற்குள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கொண்டுவரப்படும். 2025 ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விமானங்களுக்கும் படிப்படியாக விலை உயர்த்தப்படும்.

இந்த விலையேற்றங்களின் மூலம் சவுதி அரசு பெட்ரோலியம் உட்பட பல்வேறு பொருட்களுக்கு வழங்கிவரும் மானியங்கள் ரத்து செய்யப்படவுள்ளது. மின்சாரக் கட்டணங்கள் நேரடியாக உயர்த்தப்படாமல் மறைமுகமாக மின்துறை சார்ந்த பொருட்களின் மீது ஏற்றப்படுமாம். இது பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானின் தூர நோக்குத் திட்டம் 2030 என்ற பெட்ரோலியம் அல்லாத வருமானங்களை பெருக்கும் திட்டங்களில் ஒன்றாகும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Source: Gulf News 
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: