Tuesday, 5 December 2017

துபாய் விமான நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட 6.25 மில்லியன் திர்ஹம்!

துபாய் சர்வதேச விமான நிலையங்களில் 2016 ஆம் ஆண்டு பயணிகள் மறதியாக விட்டுச் சென்ற 6.25 மில்லியன் திர்ஹத்திற்கு ஈடான தொகை யாரும் கோராததால் துபை அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது என துபை விமான நிலைய 'தொலைந்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்கான போலீஸ் துறையின்' இயக்குனர் கோலனல் ராஷித் பின் சப்வான் (Colonel Rashid Bin Safwan, director of the lost and found department) தெரிவித்தார்.

கடந்த 2016 வருடம் தொலைத்துவிட்டுச் சென்ற பொருட்களை ஏலம் விட்டதன் மூலம் 4.71 மில்லியன் திர்ஹம் கிடைத்ததாகவும், நடப்பு வருடத்தில் இதுவரை 3.86 மில்லியன் திர்ஹம் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நடப்பு 2017 வருடத்தில் மட்டும் 198,000 டாலர்கள், 10,000 பஹ்ரைனி தினார்கள், 15,000 யூரோக்கள், 300,000 கத்தாரி ரியால்கள், 3,000 குவைத் தினார்கள் மற்றும் 80,000? கண்டுபிடிக்கப்பட்டு பயணிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஏலம் விடப்பட்ட பொருட்களில் சுமார் 14,000 மொபைல் போன்கள், 1,679 ஸ்மார்ட் போர்டு கருவிகள் (Smart Board Devices), 639 லேப் டாப்கள், 1,217 கேமிராக்கள், 16,000 கண்ணாடிகள், 11,000 கைக் கடிகாரங்கள் ஆகியவை ஏலம் விடப்பட்ட பொருட்களில் சிலவாகும். கடந்த வருடம் 4,826 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை ஆனால் நடப்பு வருடம் அதைவிட கூடுதலாக சுமார் 5,500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் சில கல்யாண ஒப்பந்த சான்றிதழ்கள், பல்கலைக்கழக சான்றிதழ்கள் கண்டெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் புதிய வாட்டர் கூலர், ஒரு ஜெட் ஸ்கி (தண்ணீரின் மேல் இயங்கும் பைக்), மின் ஜெனரேட்டர், 60,000 திர்ஹம் மதிப்புள்ள புதிய வெர்த்து (Vertu) மொபைல், 60 இஞ்ச் எல்சிடி டிவி போன்றவைகளையும் விட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் அடையாள அட்டைகள் (ID Cards) , கடிகாரங்கள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவைஸ்கள் ஏராளம் கண்டுபிடிக்கப்பட்டு போலீஸ் நிலையங்கள் மூலம் திருப்பித் தரப்படுகின்றன. கோரப்படாத பொருட்கள் 1 வருடம் வரை பாதுகாக்கப்பட்டு பின்பு ஏலம் விடப்படுகின்றன. எமிரேட்ஸ் ஐடிக்கள் மற்றும் அமீரகத்தினரின் பாஸ்போர்ட்டுகள் அந்தந்த துறைகளுக்கும், வெளிநாட்டினரின் ஆவணங்கள் அந்தந்த நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் அழிக்கப்படும். காலணிகள் மற்றும் துணிமணிகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தர்ம ஸ்தாபனங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. ஒருவர் பயணிகள் தவறவிட்டுச் செல்லும் பொருளை கண்டெடுத்தால் 48 மணிநேரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும். பொருட்களை ஒப்படைப்பவர்கள் அன்பளிப்பு மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி கண்ணியப்படுத்தப்படுவார்கள்.

பல பயணிகளுக்கும் துபை விமான நிலையத்தில் 'தொலைந்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்கான போலீஸ் துறை' ஒன்று செயல்படுவதையே அறிந்திருக்கவில்லை. சட்டப்படி பொருட்களை தொலைத்த பயணிகள் 1 வருடத்திற்குள் மீட்டிக் கொள்ளலாம், ஒரு வருடத்திற்குப் பின் அவை விற்கப்பட்டிருந்தாலும் மீட்டித் தரப்படும்.

பொதுவான பயணிகள் மற்றும் சுற்றுலாவாசிகள் தாங்கள் தவறவிடும் பொருட்கள் குறித்து முறையாக புகார் தெரிவித்தால் சிலவேளை துபை போலீஸாரே அந்தப் பொருட்களை உங்களின் வீடு தேடி வந்தும் தர வாய்ப்புள்ளது, நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் பொருட்களை உங்களிடம் சேர்க்க முயற்சிக்கப்படும்.

சமீபத்தில் பொருட்களை தவறவிட்டுச் சென்ற சீன பயணி மற்றும் 7 கிலோ பொருட்களை விட்டுச் சென்ற சவுதி பயணி ஆகியோருடைய பொருட்கள் அந்தந்த நாடுகளிலேயே கொண்டு சேர்க்கப்பட்டு திரும்ப வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் தொலைந்து போகும் பொருட்கள் குறித்து நேரில் புகார் தர முடியாதவர்கள் ஆன்லைன் வழியாகவும் புகார் தெரிவிக்கலாம் அதற்கான முகவரி இதோ...


Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: