Thursday, 7 December 2017

கலரூட்டப்பட்ட 2 ஆம் உலகப்போர் புகைப்படங்கள் தொகுப்பு!

இந்த பூமி 2 உலகப்போர்களை கண்டுள்ளது, இந்தப் போர்களால் பல கோடி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர்களின் நினைவுகளாக அந்தக்காலங்களில் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்களே காணக்கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் 1914 ஆம் ஆண்டு துவங்கி 1918 ஆம் ஆண்டு முடிந்துள்ள நிலையில் 2 ஆம் உலகப்போர் 1939 வருடம் துவங்கி 1945 வருடம் வரை நடைபெற்றது கவனிக்கத்தக்கது.

அழுக்காகவும், நீர் பட்டும், கிழிந்தும், மடங்கியும், சுருங்கியும் பரிதாபமாக காணப்பட்ட 2 ஆம் உலகப்போருடன் தொடர்புடைய புகைப்படங்களை டிஜிட்டல் தொழிற்நுட்பம் கொண்டு குறைகளை நீக்கி, கருப்பு வெள்ளை படங்களை வண்ணப்படங்களாக மாற்றி வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்த 48 வயது டிசைன் எஞ்சினியர் பால் ரெனோல்ட்ஸ் என்பவர்.

கலர் படங்களாய் உருமாறி இரண்டாம் உலகப்போரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்காக.

Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்











Author: verified_user

0 comments: