Saturday, 2 December 2017

இலங்கையில் வயது கூடியத பெண் தனது 115 வயதில் மரணம் (படங்கள்)

இலங்கையில் அண்மைக்காலமாக உயிர் வாழ்ந்த வயது கூடிய பெண்மணியாகக் கருதப்பட்ட 115 வயதான அனுலாவதி மரணித்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரநாயக்க பகுதியில் குடியிருந்த பெட்ரிகே அனுலாவதி 1902ம் ஆண்டு ஜுன் மாதம் 04ம் திகதி பிறந்தவராவார். இதற்கு முன் மாவனல்லை, பலத்கமுவ பகுதியில் 117 வயது வரை உயிர் வாழ்ந்த உக்கு அம்மா என அறியப்பட்டவரைத் தொடர்ந்து அனுலாவதியே இலங்கையின் வயது கூடிய பெண்ணாகக் கருதப்பட்டிருந்தார்.

அத்துடன் 110 – 115 வயதுக்கிடையிலான அனுபவஸ்தர்களின் மெய்வல்லுனர் போட்டிகளிலும் அனுலாவதி பங்கேற்று சாதனையாளராக அறியப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது


Author: verified_user

0 comments: