Thursday, 23 November 2017

பால் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை உருவாக்க இயலாது என்றா கருதுகிறீர்கள்? - கத்தார் கேள்வி!

"நாம் இதில் அதிக கவனம் செலுத்தியிருக்கவில்லை. எரி வாயு உற்பத்தி செய்யும் மிகப் பெரிய எண்ணை மற்றும் எரி வாயு  வயல்களையும், அவற்றின் உற்பத்தியை உலகுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்களையும் வெற்றிகரமாக நடத்திவரும் நமக்கு பால் மற்றும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை உருவாக்க இயலாது என்றா கருதுகிறீர்கள் ???

கத்தாரின் மீது தடை விதித்த நாடுகளிலிருந்தே இப்பொருட்களை இதுவரை தருவித்துக் கொண்டிருந்தோம். ஏனெனில், மற்ற ஜிசிசி நாடுகளின் பொருளாதார ஒருங்கினைப்புக்கும், ஜிசிசி சந்தையில் இந்நாடுகளுடன் போட்டி இட விரும்பாததாலும் மட்டுமே.

இந்தத் தடையின் ஆரம்ப நாட்களில், கத்தரின் அமீர் அவர்கள், என்னிடம். "இந்நாட்டின் குடிமக்களுக்கும், குடியிருப்ப வர்களுக்கும் முழுப் பொறுப்பு நீங்கள் தான். எந்நிலையிலும் அவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப் படலாகாது " என்றும் அறிவுறுத்தினார். தொண்ணூறு சதவிகித பால் பொருட்கள் தடை வித்தித்த நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். தடை ஏற்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் உலகின் பல பாகங்களிலிருந்தும் உணவுப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்படுகளை செய்து முடித்துவிட்டோம்.

இன்று நாற்பது சதவீதம் பால்பொருட்களை நாமே உற்பத்தி செய்கிறோம். இறைச்சி, கால்நடை, வேளாண் பொருட்கள், மீன் வளரப்பு போன்ற துறைகளில் வரும் ஆண்டுகளில் , இறைவன் நாடினால், தன்னிறைவு பெற்று விடுவோம்.

இந்தத் தடையிலிருந்து , இறைவன் நாடினால், வெளிவருவோம் முன்பைவிட உறுதியாக. " - கத்தர் பிரதமர் அப்துல்லாஹ் பின் நாஸர் அல்தானி
ஆங்கிலத்தில் -The Peninsula
தமிழில் - அபூ பிலால்

Author: verified_user

0 comments: