Tuesday, 28 November 2017

அபுதாபியில் உறவுக்கார சிறுவனை பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு மரண தண்டனை

அபுதாபியில் தனது உறவுக்கார சிறுவனை பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு மரண தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அபுதாபியில் வசித்து வந்த அஜன் மஜித் (11) என்ற சிறுவன் கடந்த யூன் மாதம் காணாமல் போன நிலையில் அடுத்த நாள் அங்குள்ள முரூர் சாலையில் உள்ள கட்டிடத்தின் மேலே சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுவன் மஜித்தை பாகிஸ்தானிலிருந்து அபுதாபி வந்து தங்கியிருந்த அவரின் 33 வயதான உறவினர் ஒருவர் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து குற்றவாளியை பொலிசார் கைது செய்து கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

பல மாதங்களாக நடந்து வந்த விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இதோடு, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நஷ்டஈடாக 200,000 திர்ஹம் வழங்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: