Wednesday, 22 November 2017

கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

வெளிநாட்டவர்கள் தங்களது நாடுகளில் மருத்துவ சோதனைகளை பூர்த்தி செய்யவும், அவர்களின் உயிரி மெட்ரிக் தரவு மற்றும் கைரேகை பதிவு (Finger Print) செய்யவும், தங்கள் நாடுகளில் தங்கள் வேலை ஒப்பந்தங்களை கையெழுத்திடவும் இன்று (19-11-2017) உள்துறை அமைச்சகம் சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

இந்த திட்டம் 8 நாடுகளில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படும், இந்தியா, நேபால், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன் நடுகல் இவற்றில் அடங்கும்.

இத் திட்டமானது 4 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும். இலங்கையில் முதன் முதலாக கொழும்பில் திறக்கப்படவுள்ளதுடன், இந்தியாவில் 7 மையங்கள், பாகிஸ்தானில் 4, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா 3, பிலிப்பைன்ஸில் 2, இலங்கை, நேபாளம் மற்றும் துனிசியாவில் ஒவ்வொன்றும் 1 திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தாரைப் பொறுத்தவரை தொழில் நிமித்தம் வரும் வெளிநாட்டவர்களுக்கான மருத்துவ சோதனை மற்றும் கைரேகை பதிவு (Finger Print) போன்றவை இங்கு வந்த பின்னரே நிறைவேற்றப்படுகின்றன. அப்படி நடக்கும் போது MEDICAL UNFIT ஆனவர்கள் மற்றும் கைரேகை பதிவு (Finger Print) தொடர்பில் பிரச்சினை ஏற்படுபவர்கள் திரும்ப நாட்டுக்கு அனுப்பப் படுவது வழக்கும். இதனால் வறுமையில் நிலையில் தொழிலுக்கான வேண்டி முகவர்களிடம் பணம் செலுத்தி வந்தவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். 

அவர் அவர்களுக்கான மருத்துவ சோதனை கைரேகை பதிவு (Finger Print) போன்றவை அவர்களது தாயகத்திலேயே இடம்பெறுவதனால் இது தொடர்பில் பிரச்சினை ஏற்படுபவர்கள் மேற்சொன்ன முறையில் இதன் பிறகு பாதிக்கப்பட மாட்டார்கள். உண்மையில் இது விடயம் அமூலாக்கம் செய்யப்படுமாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சியான செய்தி தான்!

ஆங்கிலத்தில் - Ministry of Interior - Qatar
தமிழில் - Qatar update
படங்கள் - Ministry of Interior - Qatar



Author: verified_user

0 comments: