Breaking News

மாலை நேரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை!

மாலை நேரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

களுத்துறையில் இருந்து அழுத்கம நோக்கி பயணித்த பேருந்தில் இவ்வாறான கொடுமைகள் நடப்பதாக பல பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பேருந்தில் பாலியல் எண்ணத்துடனான பல ஆண்கள் பயணிப்பதனால் பெண்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

பேருந்துகளில் பகல் நேரங்களை விடவும் மாலை 5 மணிக்கு பின்னர் கூட்டம் அதிகம் என்பதால் இவ்வாறு நெருக்கடி நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அலுவலகம், தொழிற்சாலை, தனியார் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் மாலை வேளையிலேயே வீடு திரும்புகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பேருந்துகளில் ஏறும் சில ஆண்கள் திட்டமிட்ட வகையில் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான இளைஞர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் இவ்வாறான நெருக்கடி நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments