Breaking News

ஏவுகனைகளை உருவாக்கினோம், உருவாக்குகிறோம், இன்னும் உருவாக்குவோம் - ஈரான் அதிரடி அறிவிப்பு!

2000 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் பேலட் மிசைலை ஈரான் உருவாக்கியுள்ளது. இத்தூரத்தை அதிகரிக்க எங்களால் முடியும். ஆனால், அரபு பிரதேசத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் முழுவதையும் இத்தூரம் கவர் செய்துவிடும் என்பதால் தற்போதைக்கு இதனைவிட அதிக தூர மிசைல் தயாரிக்கும் எண்ணம் இல்லை எனக் கூறியுள்ளது.
அமெரிக்காவைச் சென்றடையும் தூரம் இந்த மிசைலுக்கு இல்லை. ஆனால், ஐரோப்பிய-அரபு பிரதேசங்களிலுள்ள அமெரிக்கர்கள் அனைவரையும் இந்தத் தூரம் கவர் செய்யும். ஈரானின் பாதுகாப்புக்கு இது போதுமானது. ஈரான் மீது அடாவடியான தாக்குதலுக்கு முனைந்தால் தகுந்த பின்விளைவைச் சந்திக்கத் தயாராகிக் கொள்ளுங்கள் எனவும் ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் பேலட் மிசைல் தயாரிப்புக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதோடு, அமெரிக்க காங்கிரஸ் மூலம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளும் கொண்டு வந்தார். மிசைல் தயாரிப்பை நிறுத்தவில்லையேல் ஈரான் தகுந்த விலையினைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்ற மிரட்டலும் விடுக்கப்பட்ட நிலையில், ஈரானின் பாதுகாப்புக்காக இதற்கு முன்னரும் மிசைல் தயாரித்தோம், இப்போதும் தயாரிக்கிறோம், இன்னும் தயாரிப்போம்; அதனை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி கூறியுள்ளார். (அப்துர் ரஹ்மான்)

No comments