Wednesday, 22 November 2017

தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவிப்பு!

அமீரகத்தில் முன்பே எதிர்பார்த்திருந்தபடியே தனியார் துறை ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீலாது நபி, தியாகிகள் தினம் மற்றும் அமீரக தேசிய தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுவதால் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத்துறை ஊழியர்களுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறித்து முன்பே எமது தளத்தில் பதிந்திருந்தோம், அவர்களுடைய வேலைநாள் டிசம்பர் 4 ஆம் தேதியிலிருந்து மீண்டும் துவங்கும்.

Source: Gulf News
தமிழில் - நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: