Tuesday, 21 November 2017

சவூதியில் கடும் மழை! வெள்ளத்தால் பாதைகள் மூழ்கின. கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது (படங்கள்)

சவுதி அரேபியாவில் பலத்த மழை பெய்வதாலும், அதனையொட்டி பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் சவுதியின் பல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையும் வெள்ளமும் எதிர்வரும் வியாழன் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சவூதியின் ஜித்தா நகரில் அதிகளவு வெள்ளம் பதிவாகியுள்ளதோடு, மேலும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக சவூதியின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

(செய்தி - நம்ம ஊரான்)
(படங்கள் - அரப் நியூஸ் இணையம்)









Author: verified_user

0 comments: