Breaking News

வாகனப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! எரிபொருட்களின் விலைகள் குறைகின்றன!

எரிபொருட்களுக்கான விலைகள் குறைவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக பெற்றோலிய வளக் கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோலிய வளத் திணைக்களத்தில் இன்றைய தினம்(31) நடைபெற்ற, திணைக்களத்தின் மீளாய்வுக்குழு கூட்டத்தின் பின்னர் விலை குறைப்பு குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியனவற்றின் விலைகளை எதிர்வரும் வாரங்களில் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் கடந்த சில மாதங்களாக இலாபத்தை பதிவு செய்து வருகின்றது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் இலாபம் 9000 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments