Breaking News

கத்தார் இரயில் சோதனை ஓட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது! (வைரல் வீடியோ)

கத்தார் நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பில்லியன் கணக்கு பெறுமதியான ப்ரஜெக்ட்களில் ஒன்றான கத்தார் மெட்ரோ  விளங்குகின்றது.  எதிர்வரும் ஆண்டு இறுதியில் நிறைவடைய இருக்கும் கத்தார் இரயில் திட்டத்தின் 60-70 வரையான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக உள்ளூர் தளங்கள்  வெளியிட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி கட்டார் இரயிலின் 4 இயந்திரங்கள் ஜப்பான் நாட்டிலிருந்து கத்தார் துறைமுகத்தின் ஊடாக வந்தடைந்தன.

இந்த இரயில்கள் பொருத்தப்பட்டு முதற்கட்ட சோதனை ஓட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதனை அங்கு பணிபுரியும் ஒருவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 27 செக்கன்கள் கொண்ட வீடியோ தற்போது கத்தாரில் வைரவாக பரவி வருகின்றது.



இந்த வீடியோவைக் கீழே காணலாம். வக்ராப் பகுதியில் இருந்து, வடக்கு லுசைல் சிட்டி வரையான 40 கீலோ மீற்றர்கள் இந்த சோதனை ஓட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments