Wednesday, 29 November 2017

ஓமானில் நடந்த சோகம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள் தீயில் கருகி உயிரிழப்பு!

ஓமன் நாட்டின் பர்கா மாகாணத்தின் அல் சலாம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 வயதுடைய தாய், அவருடைய 7 முதல் 15 வயது வரையுள்ள 5 பெண் குழந்தைகள், 28 வயதுடைய சகோதரி மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் என 8 பெண்கள் மரணமடைந்தனர். தந்தை காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தீயணைப்புத் துறையினர், திடீர் தீயால் பரவிய புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாலேயே அவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்றும், மின் சாதனங்களை சரியாக முறையில் கையாளுமாறும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

Author: verified_user

0 comments: