Breaking News

வீட்டில் கோபித்துக் கொண்டு விமானம் ஏறிய 7 வயது சிறுமி ! சுவிஸில் சம்பவம்


சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவா நகரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் ஜெனீவா நகரின் மத்திய ரயில்வே நிலையத்தில் இருக்கும் போது பெற்றோருடன் கோபித்துக் கொண்டு பெற்றோருக்கு தெரியாமல் விமான நிலையம் நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறினாள் பின் விமான நிலையத்திற்குள் சென்ற சிறுமி தந்திரமாக அனைத்து சோதனைகள் மற்றும் புறப்பாட்டிற்காக காத்திருக்கும் பகுதிகளையும் கடந்து பிரான்ஸ் நோக்கிச் செல்லும் விமானத்திலும் ஏறிவிட்டாள்.

விமானத்தினுள் ஊழியர் ஓருவர் இச்சிறுமியை கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்தே இச்சிறுமி டிக்கெட்யின்றி, வேறு துணையுமின்றி ஊடுருவியது தெரிய வந்தது. சிறுமி என்பதால் விமான நிலைய அதிகாரிகள் கவனிக்கத் தவறியிருந்தனர்.

இதற்கிடையில், சிறுமியை தொலைத்த பெற்றோர்கள் போலீஸாரிடம் செல்ல, அவர்கள் ரயில் நிலையம் மற்றும் விமான நிலைய சிசிடிவி கேமிராக்கள் வழியாக மிகச்சரியாக பின் தொடர்ந்து வந்தனர்.

ரொம்ப கோவக்காரச் சிறுமியாக இருப்பாளோ! எ்ன்பதாக இணையத்தளங்கள் கூட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments