Breaking News

அமெரிக்காவுக்கான பயண சீட்டு! இலங்கையில் பஸ்ஸில் 40 ரூபாவுக்கு விற்பனை! விநோத சம்பவம்!

தம்புள்ளை பேருந்தில் விநியோகிக்கப்பட்ட பயண சீட்டு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
தெல்தெனியவில் இருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் பேருந்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட டிக்கட் தொடர்பில் தற்போது பேசப்பட்டு வருகிறது.
பேருந்தில் தம்புள்ளையில் இருந்து கொஹோபிலிவெவ வரை பயணிப்பதற்கு 40 ரூபாய் கொடுத்து நபர் ஒருவர் பயண சீட்டை பெற்றுள்ளார்.
எனினும் அந்த பயண சீட்டில் கொஹோபிலிவெவ என குறிப்பிடப்படுவதற்கு பதிலாக கொலம்பியா என பதிவாகியுள்ளது.
பேருந்துகளில் பயன்படுத்தும் இயந்திரம் மூலம் பயண சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெல்தெனிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொலம்பியா அல்லது கொலொம்பியக் குடியரசு என்றழைக்கப்படுவது தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் நடு அமெரிக்காவிலுள்ள ஒரு நாடாகும்.

No comments