Wednesday, 29 November 2017

2018 ஜுலை முதல் கத்தார் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையும்! சவூதிக் கூட்டணிக்கு நன்றி

எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜுலை மாதம் முதல் பால் உற்பத்தியில் கத்தார் தன்னிறைவு அடையும் என்பதாக கத்தார் தெரிவித்துள்ளது. இதற்காக கத்தாருடனான தொடர்புகளை துண்டித்த அரபு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

கத்தாருடனான அணைத்து விதமான உறவுகளையும் சவூதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டணி துண்டித்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், கத்தார் வெளிநாடுகளில் இருந்து கறவைப் பசுக்களை இறக்குமதி செய்து தற்போது உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது நாளுக்கு நாள் உற்பத்திகள் அதிகரித்து செல்வதோடு எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதம் முதல் கத்தாருக்கு தேவையான அனைத்து பால் உற்பத்திகளையும் மேற்கொள்ள முடியும் என்பதாக John Dore, chief executive officer of Baladna Livestock Production அவர்கள் தெரிவித்துள்ளார்.

கறவைப் பசுக்கள் ஜேர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளதோடு டோஹா நகரின் வடக்குப் பக்கமாக 80 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பண்ணையில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்திப் பொருட்கள் கத்தார் தரைமார்க்கத்தை வழியாகக்கொண்ட சவூதி அரேபியாவிலிருந்தே தருவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கடந்த ஜுன் 5ம் திகதிக்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வினால் நாம் மாற்று வழியை சிந்திக்க வேண்டி ஏற்பட்டது. எனவே நாம் பசுக்களை இறக்குமதி செய்து உற்பத்தியை மேற்கொள்ள தீர்மானித்தோம் 

இதற்காக 4000 கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்பட திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 165 பசுக்கள் கடந்த ஜுலை 11ம் திகதி கொண்டுவரப்பட்டன. தற்போது 3400 பசுக்கள் வரை கத்தாரை வந்தடைந்துள்ளன. மீதி உள்ள 600 பசுக்கள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் கொண்டுவரப்படும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் உற்பத்திகளை மேற்கொள்வதோடு எதிர்பாலத்தில் இவை இன்னும் அதிகரிக்கப்படவிருக்கின்றன. அந்த வகையில் எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜுன் அல்லது ஜுலை மாதம் வரையில் கத்தார் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என்பதாக Baladna Livestock Production நிறுவனத்தில் தலைவர் John Dore அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் – கல்ப்டைம்ஸ்
தமிழில் – உண்மையின் பக்கம்.





Author: verified_user

0 comments: