இலங்கையில் காய்கறி விலைகள் தாறுமாறாக அதிகரிப்பு

Published On Tuesday, 10 October 2017 | 01:28:00

காய்கறி விலைகள் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காய்கறிகளின் நிரம்பல் குறைந்துள்ளமையினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நுவரெலியா பிரதேசத்திலிருந்து பெறப்படும் காய்கறிகளின் விலையிலும்அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாத்துவ உதவியாளர் டீ. கே. சுபசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு மெனிங் மொத்த விற்பனை சந்தையிலும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். மழையுடனான காலநிலையின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved