கட்டையால் தாயை தாக்கி, கிணற்றுக்குள் வீசி கொலைசெய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன்

Published On Tuesday, 10 October 2017 | 15:17:00

யாழ்ப்பாணத்தில் தாயை கட்டையால் தாக்கியதுடன், கிணற்றுக்குள் வீசி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்டம் பகுதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 

70 வயதுடைய செ.ரத்னாம்பிகை என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் மனநலம் குன்றிய அவருடைய மகனால் ரீப்பையால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையிலேயே பலியாகியுள்ளார். 

மேலும், குற்றத்தை அவர் பொலிஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved