Wednesday, 25 October 2017

மைத்திரிபால சிரிசேன முஸ்லிம் அமைச்சர்களை கத்தாருக்கு அழைத்துச் செல்வதன் மர்மம் இது தான்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வாய்கிழமை -24- உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ளார்

இவ்விஜயத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா,  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  மற்றும் இன்னும் சில அமைச்சர்களும் மற்றும் ஆசாத் சாலியும் ஜனாதிபதியுடன் இணைந்து கட்டார் செல்லவுள்ளனர்.

தான் முஸ்லிம்களுக்கு ஆதரவானவன், தமது நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஆதரவானது,  தனது தனது அரசாங்கத்தில் இத்தனை முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர், நாட்டு  முஸ்லிம்கள் சகலரும் எனக்கும், எனது அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்கின்றனர் என்ற போலி தோற்றப்பாட்டை கட்டார் அரசுக்கு  தெரிவிக்கவே இவ்வாறு மிக அதிகமான முஸ்லிம் அரசியல்வாதிகளை ஜனாதிபதி கட்டாருக்கு அழைத்துச் செல்வதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது.

Author: verified_user

0 comments: