Breaking News

கத்தாரில் இலங்கை ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு (படங்கள் இணைப்பு)

கட்டார் நாட்டின் மன்னர் தமீம் பின் அஹமட் அல்தானி அவர்களின் அழைப்பை ஏற்று இரண்டுநாள் அரச முறை பயணம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (24) இரவு டோஹா நகரில் உள்ள ஹமட் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அவரை கட்டார் நாட்டின் பொருளாதார, வர்த்தக அமைச்சர் செய்க் அஹமட் பின் யாசின் பின் மொஹமட் அல்தானி அவர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் விசேட பிரதிநிதிகள் ஜனாதிபதி அவர்களை வரவேற்றனர்.
கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் ஜனாதிபதி அவர்களை வரவேற்க பிரசன்னமாகியிருந்தனர். அதனை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலிலும் விசேட வரவேற்பு நிகழ்வொன்று தூதரக அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


No comments