கத்தார் வாழ் சகோதரர்கள் கவனத்திற்கு! இன்று முதல் பெற்றோல் விலை அதிகரிப்பு!

Published On Sunday, 1 October 2017 | 11:11:00

ஒக்டோபர் மாதம் முதல் திகியான இன்று முதல் பொற்றோலின் விலையில் சிரிய அதிகரிப்பைக் கொண்டுவந்துள்ளதாக எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. 

அந்த வகையில் செப்டம்பர் மாதம் 1.60 றியால்களாக விற்கப்பட்டு வந்த 95-octane சூபர் பெற்றோல் 10 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.70 றியால்களாகவும், 1.50 றியால்களாக விற்கப்பட்டு வந்த 91-octane பிரிமியம் பெற்றோல் 10 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு  1.60 றியால்களாகவும் விற்கப்பட இருக்கின்றன. அத்துடன் 1.50 றியால்களாக விற்கப்பட்டு வந்த டீசல் 10 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது 1.55வில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அறிவித்தலை  கத்தார்  எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு  உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்ப கத்தாரின் எரிபொருள் விலையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved