இஸ்லாமியர் வீட்டில் இரத்தம் ஒழுகிய நிலையில், பன்றியின் தலையை வீசிவிட்டு தப்பியோடிய மர்மநபர்கள் - பிரிட்டனில் சம்பவம்!

Published On Saturday, 7 October 2017 | 10:06:00

பிரித்தானியாவில் இஸ்லாமியர் வீட்டில் இரத்தம் ஒழுகிய நிலையில் பன்றியின் தலையை மர்ம நபர்கள் வீசி விட்டு சென்றதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் Oldham பகுதியில் உள்ள இஸ்லாமியர் வீட்டில், கடந்த மாதம் 30-ஆம் திகதி இரவு 10 மணி அளவில் மர்மநபர்கள் வீட்டின் ஜன்னல் வழியே இரத்தம் வழிந்த பன்றியின் தலையை வீசி விட்டு சென்றுள்ளனர்.

அப்போது அந்த தலை வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் மீது பட்டதால், அவர்கள் பயந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து துப்பறியும் தலைமை காவலர் Chris Downey கூறுகையில், மர்மநபர்கள் சிலர் வேண்டுமென்றே இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இது ஒரு வெறுக்கத்தக்க செயல், திடீரென்று இரத்த வழிந்த நிலையில் பன்றியின் தலை வீசப்பட்டால் யாருக்கு பயம் இருக்காது.

இந்த செயலால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏதேனும் தகவல் எதுவும் தெரிந்தால் உடனடியாக தங்களுக்கு தெரிவிக்கும் படியும் கூறியுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து Ajaz Mahmood கூறுகையில், தனது மனைவி தனக்கு தொடர்பு கொண்டு கண்ணீருடன் பேசினாள்.

பன்றியின் தலை மட்டுமின்றி, கைகளும் பிளாஸ்டிக் பையில்போட்டு கட்டப்பட்ட நிலையில், வீட்டில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் ஒரு நபரின் தலை முடி மிக நீண்டதாக இருந்தாகவும் பொலிசார் சந்தேகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved