கத்தளாயில் சோகம் - ஜமாத் சென்றவர், நீரில் மூழ்கி பரிதாப மரணம்

Published On Thursday, 12 October 2017 | 13:49:00

கந்தளாய் பிரதேசத்திற்கு மார்க்க கல்வியை கற்பதற்காக ஜமாத் கடமைக்கு வருகை தந்திருந்த இளைஞர்கள் குளத்திற்கு குளிக்க சென்ற வேளை நீரில் மூழ்கி இன்று (12) காலை இளைஞனொருவர் வபாத்தாகியுள்ளதாக கந்தளாய் தலைமயை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்முனை-பாண்டியிருப்பு பகுதியைச்சேர்ந்த முகம்மட் ஜவ்பர் பாஹீம் முகம்மட் (20வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞனின் ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved