பிரித்தானியாவில் மர்மமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

Published On Monday, 2 October 2017 | 09:22:00

பிரித்தானியாவில் இடம்பெற்ற கொடூர தாக்குதலினால் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தையான மொஹமட் ரஷீட் என்ற இலங்கையர் தனது 51வது பிறந்த நாளுக்கு முதல் நாள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் Windsor பகுதியின் Goswell Hill வீதியில் கடந்த 10ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் ரஷீட் சுயநினைவை இழந்த நிலையில் காணப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் உயிரிழந்த ரஷீட்டிற்கு கடந்த 21ஆம் திகதி உறவினர்களால் அவரது 51 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

பிறந்த நாள் அட்டை மற்றும் மெழுவர்த்திகளை அவர் தாக்குதலுக்குள்ளான இடத்தில் வைத்து பிறந்த நாள் பாடல் பாடப்பட்டுள்ளது.

ரஷீட் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் கொலை செய்தவர்களை தேடி Thames Valley பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் 28 மற்றும் 31 வயதுடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், நேற்று முன்தினம் அவர்களின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved