Sunday, 8 October 2017

புத்தரின் உருவம் பொறித்த ஆடையை அணிந்திருந்த பெண்ணுக்கு விமான நிலையத்தில் நடந்த விபரீதம்

புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து வெளியேற முயற்சித்த போதே அவர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பௌத்த மதத்தை அவமரியாதைக்கு உட்படுத்தும் வகையில் இந்த ஆடையை தாம் அணியவில்லை என குறித்த இந்திய பெண் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடையை மாற்றுமாறு இந்திய பிரஜையிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக புத்தரின் உருவத்தை தமது உடலில் பச்சை குத்தியிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: