சார்ஜாவில் இலங்கையரின் கொடூரம்! இளம் மனைவி பலி, மற்றொருவர் ஆபத்தில்..

Published On Thursday, 5 October 2017 | 11:57:00

மத்திய கிழக்கு நாடொன்றில் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இளைஞன் மேற்கொண்ட அசிட் தாக்குதல் காரணமாக ஸ்ரீலங்கா பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சார்ஜாவில் பணியாற்றிய தனது மனைவி மீது ஸ்ரீலங்காவைச் சேர்ந்த கணவன் அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளமையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த ஒரு வார காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த பெண், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மனைவியின் முறையற்ற தொடர்பு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறையொன்றில் வேரொரு ஆணுடன் மனைவி இருந்த வேளையில், ஆத்திரமடைந்த கணவன் இருவர் மீதும் அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

எனினும் மனைவி உயிரிழந்துள்ள நிலையில், அவரது காதலன் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஷில் ஸ்ரீலங்கா நாட்டவர் ஒருவர் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர் ஸ்ரீலங்கா சென்ற நேரத்தில் அவரது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட கணவர், மனைவிக்கு தெரிவிக்காமல் ஷார்ஜாவில் உள்ள விடுதி ஒன்றில் அவர் தங்கியுள்ளார். அங்கிருந்து தனது மனைவி அவரது காதலருடன் உள்ள வீட்டிற்கு செல்லும் வரை அவதானித்துள்ளார்.

பின்னர் அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளார். வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த கணவர், இருவர் மீதும் அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். 

அதன் பின்னர் அவர்களை உள்ளேயே வைத்து கதவை மூடி விட்டு ஷார்ஜா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 25 வயதுடைய மனைவி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். 

23 வயதான அவரது காதலன் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட 30 வயதுடைய இலங்கையரான பிரிஷ்னி என்பவர் அங்கிருந்து இலங்கைக்கு தப்பி செல்ல முயற்சித்த வேளை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved