Sunday, 8 October 2017

துபாயிலுள்ள பிரபல மலையிலிருந்து தவறுதலாக விழுந்த கார்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்!


அமீரகத்தின் சமீபத்திய புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ராஸ் அல் கைமாவில் இருக்கும் ஜெபல் அல் ஜைஸ் எனும் மலை, இந்த மலையே அமீரகத்தின் மிக உயரமான சிகரமாக விளங்குகிறது.. இங்குள்ள மலைப்பாதையில் வாகனத்தை ஒட்டி ரசிப்பதற்கென்றே அமீரகம் முழுவதிலிழுமிருந்து ஒரு பெருங்கூட்டம் விடுமுறை தினங்களில் செல்லும்.

நேற்று (வெள்ளி 06-10-2017) மாலை சுமார் 6 மணியளவில் தந்தை, தாய் மற்றும் மகன் என சென்ற ஒரு பாகிஸ்தானிய குடும்பத்தின் கார் ஒன்று எதிர்பாராவிதமாக மலைப்பாதையில் சறுக்கியதால் மலையிலிருந்து ஒரு கிடுகிடு பள்ளத்தில் விழுந்தனர்.

அந்தக் காரும் குடும்பமும் எளிதில் யாரும் சென்று மீட்க இயலாத பாறைப்பகுதியில் மாட்டியிருந்ததால் போலீஸ் துறையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அந்த பாகிஸ்தானிய பெண் பலத்த கால் முறிவுடனும், தந்தையும் மகனும் காயங்களுடனும் உயிர் தப்பினர்.

இவ்விபத்தை தொடர்ந்து, மலைப்பாதைகளில் மிக கவனமாக வாகனங்களை செலுத்தும்படியும், போக்குவரத்து விதிகளை பின்பற்றும்படியும், சுய பாதுகாப்பிற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் ராஸ் அல் கைமா போலீஸ் பொது வேண்டுகோள் விடுத்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: