Breaking News

முதலையை திருமணம் செய்த நபர் - மெக்சிகோ நாட்டில் விநோதச் சம்பவம் (படங்கள்)

மெக்சிகோவின் சன் பெட்ரோ உமெலுலா பகுதியில் நாட்டின் மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நகர மேயர் முதலையை திருமணம் செய்துள்ள வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நகர மேயரான விக்டர் என்பவரே இவ்வாறு முதலையை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவரின் திருமணம் மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

முதலைக்கு வெள்ளை நிறத்தில் ஆடைகள் உடலில் கட்டப்பட்டு. மேலும் அதன் வாய்ப்பகுதி துணியினால் மூடப்பட்டிருந்தது. பின்னர் முதலையை மேயர் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

மேயர் முதலையை கையில் வைத்துக் கொண்டு அங்கிருந்தவர்களுடன் நடனம் ஆடியுள்ளார். அந்த நாட்டின் கலாசாரம் வருடா வருடம் மேயர் ஒரு முதலையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதாகும்.

இவ்வாறு செய்தால் அந்நாட்டு மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.




No comments