Breaking News

கத்தாரில் பல் மருத்துவம் என்பது தங்கத்தை விட பெறுமதியானது. உங்களது பற்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

மத்திய கிழக்கைப் பொறுத்த வரையில் மருத்துவம் என்பது தங்கத்தைப் போன்று விலையுயர்ந்தது. உதாரணரத்துக்கு இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் சாதாரண காய்ச்சல் மற்றும் தலைவலிக்குப் பயன்படுத்தும் பெரசிடமோல் கூட இந்தியப் பெறுமதியில் 10-15 ரூபா வரையிலும், இலங்கைப் பெறுமதியிலும் 20-30 ரூபா வரையிலும் விற்கப்படுகின்றது. இது இப்படி இருக்க பல் மருத்துவத்தைப் பற்றி பேச தேவையில்லை. 

குறிப்பாக கத்தாரில் தனியார் மருத்துவமனைகளில் பல் மருத்துவ செலவுகள் பற்றி கத்தார் அரசு தொடர்ந்து முறைப்பாடுகளைப் பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


Dental Braces எனப்படும் பல்லை கம்பி போட்டு அழகு படுத்தலை மேற்கொண்ட ஒருவர் ஊடகங்களுக்கு தனது அனுபவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது தனியார் மருத்துவமனைகளில் dental bracesயிற்கு அவர்களது பற்களின் நிலை மற்றும் சேவையின் தரம் பொறுத்து 7000-14000 கத்தார் றியால்கள் வரை அறிவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், 
தனியார் மருத்துவமனைக்கு வந்தவுடன் எனக்காக ஒரு கோர்ப்பை திறந்து ஆரம்ப சோதனைக்காக 1000 றியால்கள் அறவிட்டார்கள். பின்னர் dental braces க்கு 8000 றியால்களும், அறவிடப்பட்டன. என்றார். 
இதே நிலை தான் அனைத்து தனியார் வைத்தியசாலைகளிலும் தொடர்கின்றது. உதாரணத்துக்கு பல்  பிடுங்க போனால் அவ்வளவுதான். கத்தாரில் குறைந்தது ஒரு பல் பிடுங்க 300 றியால்கள் வரை சிலவாகும். இலங்கைப் பெறுமதியில் இது 12 000 ரூபாய்களைத் தாண்டும். 

அத்துடன் பெரும்பாலான கம்பனிகளினால் வழங்கப்பட்டுள்ள MEDICAL INSURANCE களில் பல மருத்துவம் என்பது விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  எமது பற்களை நாமே சிறந்த முறையில் போணுவது தான் எம்மையும், எமது சம்பளத்தையும் பாதுகாக்க உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

No comments