கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான சம்பளம் கட்டாரில் அதிகரிப்பு

Published On Tuesday, 3 October 2017 | 15:44:00

கட்டார் தரவுகளுக்கமைய அந்நாட்டில் வீட்டுப்பணிப்பெண்களுக்கான ஊதியமானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 4.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் 431 டொலராக (1,575 கட்டார் ரியால்) இருந்த வீட்டுப் பணிப்பெண்களுக்கான சம்பளம் இவ்வருடம் 450 டொலராக (1,645 கட்டார் ரியால்) ஆக அதிகரித்துள்ளது.
கல்ப் வலய நாடுகளின் ஏனைய நாடுகளில் காணப்படும் வீட்டுப் பணிப்பெண்களுக்கான சம்பளத்துடன் இருக்கையில் கட்டார் சம்பள அளவு இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சவுதி அரேபியா உள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான ஊதியம் 442 அமெ. டொலர் (1,638 சவுதி ரியால் சம்பளமாக வழங்கப்படுகிறது.
மேலே அடிப்படை சம்பளம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வைத்திய செலவு, ஏனைய கொடுப்பனவு, உணவு, உடை மற்றும் விமான டிக்கட் கட்டணம் என்பன உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved