தகவல் தெரிந்தால், உடன் தொடர்பு கொள்ளவும்! - வெளியாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவிப்பு

இந்தோனேசியாவில் இடம்பெற்ற சிற்றூர்ந்து விபத்தொன்றில் உயிரிழந்த நபரொருவரின் உறவினர்களை தேடும் நோக்கில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , குறித்த நபரின் பெயர் ஜேசுதாசன் ஜோன்சன் ஜெயதேன் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரின் பிறந்த திகதி 12.03.1977 ஆகும்.

இவரின் கடவுச்சீட்டு இலக்கம் N2311121 ஆகும்.

இவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அவரின் உறவினர்களை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவி கோரிப்பட்டுள்ளது.

அதன்படி , இவர் தொடர்பில் தகவல் தெரியும் நபர்கள் , 2வது மாடி , செலிங்கோ கட்டிடம் , ஜனாதிபதி மாவத்தை , கொழும்பு 01 என்ற முகவரியில் அமைந்துள்ள வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

தொலைப்பேசி இல - 011-2338836 / 011-5668634

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget