Wednesday, 25 October 2017

கத்தாரில் உள்நாட்டு காய்கறிகளை விற்க நாளை முதல் சிறப்பு குளிர்கால சந்தை ஆரம்பம்!

கத்தாரில் எதிர்வரும் குளிர்காலத்தை முன்னிட்டு மூன்று சிறப்பு காய்கறி சந்தைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. கத்தார் உள்ளுர் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை உடனுக்குடன் விற்பனை செய்யும் வகையில் தான் இந்த சிறப்பு சந்தைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. மொத்தமாக 80 பண்ணைகளில் இருந்து காய்கறிகள் சந்தைக்கு வர இருப்பதாக நகராட்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. 
மேற்படி சந்தைகளில் உள்ளுர் உற்பத்திகள் நியாயமான  விலைக்கு விற்பனைக்கு வரவுள்ளதாக மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி சிறப்பு சந்தைகள் வக்ரா, முன்தசாஹ் மற்றும் அல்கோர் போன்ற பகுதிகளில் அமைய இருக்கின்றன. அவற்றுக்கான அமைவிடங்களை கீழே காணலாம்.
LOCATIONS
வக்ரா சிறப்புச் சந்தை அமைவிடம்
முன்தசாஹ் சிறப்புச் சந்தை அமைவிடம் 
அல் கோர் சிறப்புச் சந்தை 

Author: verified_user

0 comments: