சிறைச்சாலையில் கைதியொருவர் கொலை - அடையாளம் காண உங்கள் உதவியை நாடும் பொலிஸார்..

வெலிக்கடை சிறைச்சாலையின் மனநோயாளர் பிரிவு சிறைச்சாலையில்தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர்மற்றுமொரு மனநோயால்பாதிக்கப்பட்ட சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த செப்டம்பர்மாதம் 6ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சந்தேக நபர் முஹம்மட் அபூபக்கர் என அடையாளம்காணப்பட்டுள்ளார்கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி முதல் அவர்வெலிக்கடை சிறைச்சாலையின் மனநோயாளர் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள குடும்பஉறவினர்கள் எவரும் முன்வரவில்லை எனவும்குறித்த நபர் மனநோயால்பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.

இவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் பொரல்லை பொலிஸ்நிலையத்தின் 011-2696950, 077-7264299 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குதொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget