Breaking News

கட்டாரில் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

கத்தாருக்கு இரண்டு நாள்  உத்தியோக  விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் பல முஸ்லிம் அமைச்சர்களை தன்னுடன் அழைத்து வந்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.  முஸ்லிம் நாடு ஒன்றுக்கு செல்லும் போது இவ்வாறு முஸ்லிம் அமைச்சர்களை கூட்டி வரும் போது எங்களுடன் முஸ்லிம் இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதற்காக என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் கத்தாருக்கு வந்து இதுவரை முஸ்லிம் அமைச்சர்கள் எந்த விதமான உறுப்படியான வேலைகளைச் செய்துள்ளதாக எந்த  செய்தியும் வெளியாகவில்லை.

மாற்றமாக ஜனாபதி மைத்திரிப்பால சிறிசேன அவர்களை புடைசூழ எடுக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அது மட்டுமல்லாது நேற்று மாலை உலகில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய  தொல்பொருள் நிலையத்திலும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியைப் சூழ  காணப்பட்டுள்ளனர்.



No comments