Thursday, 26 October 2017

துபாய் பிரபல பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ விபத்து ! (படங்கள் இணைப்பு)


துபை பாம் ஜூமைராவில் (Palm Jumeirah) இன்று காலை சுமார் 11.15 மணியளவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 24 மாடி கட்டிடத்தில் திடீரென தீப்பற்றியது. தகவல் கிடைத்தவுடன் அல் பர்ஸா மற்றும் அல் மர்ஸா ஆகிய தீயணைப்பு நிலையங்களின் வீரர்கள் சுமார் 20 நிமிடங்களுக்குள் தீயை அணைத்தனர்.

தீ பற்றியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை மேலும் எத்தகைய காயங்களோ, அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்


Author: verified_user

0 comments: