Thursday, 5 October 2017

தாம்பத்தியம் சிறக்க வேண்டுமா? உடனே இந்தப்பழத்தை நாடுங்கள்!

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு சிட்டிகையளவு தூளை எடுத்து, ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் போட்டுக் கலக்கி 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண் மலடு நீங்கும்.
ஜாதிக்காய், சித்திர மூலவேர், இலவங்கம், ஏலக்காய், அசல் கற்பூரம், இவைகளில் வகைக்கு 1௦ கிராம் எடுத்து, உரலில் போட்டுத் தூள் செய்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை ஒரு விரற்கடையளவு எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் விட்டுக் கலக்கிக் குடித்து விட வாத நோய் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். இதே மருந்து, சுவாசகாசம், பெரும்பாடு, பக்கவாதம், தலைவலி, வயிற்றுவலி இவைகளைக் குணப்படுத்தும்.
ஜாதிக்காய், சீரகம், சுக்கு இவைகளை நெல்லிக்காயளவு எடுத்து, அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை மூன்று சம உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, காலை மாலை தினசரி ஒரு வேலைக்கு ஒரு உருண்டை வீதம் அரை யாழாக்குப் பச்சைப் பசும்பாலில் காய்த்துக் குடித்து வந்தால் மூன்றே நாட்களில் வயிற்றுப்போக்கு நிற்கும்.
ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில்வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

Author: verified_user

0 comments: